Saturday, June 21, 2008

அழகு கவிதை வடித்தான்!


அழகு கவிதை வடித்தான்.
அடடா பிரம்மன்
இலக்கணம் யாரிடம்
படித்தான்?


கல்லென்று பஞ்சையும்
முள்ளென்று மலரையும்
தள்ளி வைத்த சீரடிகள்
வள்ளுவனின் ஈரடிகள் - பாதம்!


வாசலில் நின்றன
இருபுறம் வாழை
வசந்தச் சோலையின்
இன்பப் பேலை - கால்கள்!


வாடா மலருக்கு
அரண் தொடை
வற்றிய இடைக்கு
முரண் தொடை!


ஒட்டியே சயங்
கொண்டாள் கடை
தட்டிய தளை
தாவும் கைவளை!


மேலே
கருமேகம் முழுநிலா
வந்து
குலாவிடும் இருபலா!


ஆசைதான்
அரவணைக்க!
பக்கம் பக்கம் நின்றன
பந்தென!
சந்தெனக் குன்றென!
ஒன்றைப் போல ஒன்றைத்தான்
எப்படித்தான் செதுக்கி வைத்தான்?
இல்லை
இரண்டிற்கும் இடையிலொரு
கண்ணாடி பதுக்கி வைத்தான்!
இல்லை
இரண்டும் வளர்ந்தோங்கி
இடைவெளிதான் அடைக்க
கண்ணாடி வைப்பதற்கு
இடமங்கு யார் படைக்க?


எதுகையும் மோனையுமாய்
எழில் கொஞ்சும் வீணை!
இருகையும் மீட்டுகையில்
இன்பமதன் ஆணை!


தெங்கங்காய் சீர்தானோ
வஞ்சிச்சீர்!
மங்கை மாங்கனிச்சீர்கோ
இல்லை நேர்!


'தன்மை' 'மென்மை'
'முன்னிலை' படர்க்கையே 'படர்க்கை'
மேனிபவளம் வெண்பா!
இவள்
அழகுக் குஞ்சுகளுக்கெல்லாம்
ஆசிரியப்பா!


இச்சையில் இனியவள்
'அகவல் ஓசை'
பச்சையாய் பன்மொழி
'செப்பல் ஓசை'
இச்செனத் 'துள்ளல் ஓசை'
மிச்சமில்லாத 'தூங்கல் ஓசை'


அழகு கவிதை வடித்தான்.
அடடா பிரம்மன்
இலக்கணம் யாரிடம்
படித்தான்?

No comments: