Monday, February 2, 2009

கனவு கலையவில்லை...

கனவு கலையவில்லை...
ஆனால் - என் தூக்கம் கலைந்து போச்சே.....

Saturday, June 21, 2008

அழகு கவிதை வடித்தான்!


அழகு கவிதை வடித்தான்.
அடடா பிரம்மன்
இலக்கணம் யாரிடம்
படித்தான்?


கல்லென்று பஞ்சையும்
முள்ளென்று மலரையும்
தள்ளி வைத்த சீரடிகள்
வள்ளுவனின் ஈரடிகள் - பாதம்!


வாசலில் நின்றன
இருபுறம் வாழை
வசந்தச் சோலையின்
இன்பப் பேலை - கால்கள்!


வாடா மலருக்கு
அரண் தொடை
வற்றிய இடைக்கு
முரண் தொடை!


ஒட்டியே சயங்
கொண்டாள் கடை
தட்டிய தளை
தாவும் கைவளை!


மேலே
கருமேகம் முழுநிலா
வந்து
குலாவிடும் இருபலா!


ஆசைதான்
அரவணைக்க!
பக்கம் பக்கம் நின்றன
பந்தென!
சந்தெனக் குன்றென!
ஒன்றைப் போல ஒன்றைத்தான்
எப்படித்தான் செதுக்கி வைத்தான்?
இல்லை
இரண்டிற்கும் இடையிலொரு
கண்ணாடி பதுக்கி வைத்தான்!
இல்லை
இரண்டும் வளர்ந்தோங்கி
இடைவெளிதான் அடைக்க
கண்ணாடி வைப்பதற்கு
இடமங்கு யார் படைக்க?


எதுகையும் மோனையுமாய்
எழில் கொஞ்சும் வீணை!
இருகையும் மீட்டுகையில்
இன்பமதன் ஆணை!


தெங்கங்காய் சீர்தானோ
வஞ்சிச்சீர்!
மங்கை மாங்கனிச்சீர்கோ
இல்லை நேர்!


'தன்மை' 'மென்மை'
'முன்னிலை' படர்க்கையே 'படர்க்கை'
மேனிபவளம் வெண்பா!
இவள்
அழகுக் குஞ்சுகளுக்கெல்லாம்
ஆசிரியப்பா!


இச்சையில் இனியவள்
'அகவல் ஓசை'
பச்சையாய் பன்மொழி
'செப்பல் ஓசை'
இச்செனத் 'துள்ளல் ஓசை'
மிச்சமில்லாத 'தூங்கல் ஓசை'


அழகு கவிதை வடித்தான்.
அடடா பிரம்மன்
இலக்கணம் யாரிடம்
படித்தான்?

Thursday, May 1, 2008

இசையில்லாப் பாடல்

சின்ன சின்னதாய் சிலிர்த்திடும் சில கனவுகள்செல்ல செல்லமாய் எனக்குள்ள் சிறு சாரல்கள்கனவுகள்….

உன் கண்கள் சேருமா?சாரலில்… உன் இதயம் நனையுமா?

காதல் பூக்கள் கண்கள் போலே பூக்க வைத்தேன்பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி வைத்தேன்

நீ வரும்வழியில்… உன் கருவிழியும்… வண்டாகுமோ… கொண்டாடுமோ(சின்ன சின்னதாய்)
காற்றைக் கூட பாடல் மூலம் உழுது வைத்தேன்காதல் கவிதை எந்தன் இதழில் எழுதி வைத்தேன்உன் பூவிதழும்… உன் தேனிதழும்… இசையாகுமோ… கவிசேருமோ
(சின்ன சின்னதாய்)
கனவில் வந்தாய் கன்னக் குழியில் நழுவ பார்த்தேன்காலைப் பனியில் காதல் கலந்து மழை வார்த்தேன்உன் கல்மனசும்… என் நிலமாகும்…. மண்வாசனை… உண்டாகுமோ
(சின்ன சின்னதாய்)





நன்றி அருட்பெருங்கோ...

வருக வருக...

வணக்கம்,
இது என் களம்..
அன்புடன்
இவன்..